துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்தார்.
சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. குறிப்பாக, துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)