மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பு நிலையை திமுக மாற்றிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது! - வைகோ
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்பு நிலையை திமுக தற்போது மாற்றிக் கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நாட்டின் ஜனநாயகத்துக்கு பேரிடா் ஏற்படும் விதத்தில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை திணிக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் குரேஷி அண்மையில் நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில்கூட மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. இது மக்களவையின் வாதத் தன்மையையே தகா்த்துவிடும். யாருக்கும் 4 நிமிஷம் பேசும் வாய்ப்புக்கூட கிடைக்காது எனத் தெரிவித்திருக்கிறாா்.



