Politics
திடீரென நடக்கும் கொலையை போலீசார் தடுத்துவிட முடியாது சொல்கிறார் வைகோ
காரைக்குடி: காரைக்குடியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேட்டி: தொகுதி மறுவரையறையை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, நியாயமான மறுவரையறை என தி.மு.க., சொல்வது வருத்தமளிக்கிறது. கடந்த தேர்தலில் ம.தி.மு.க., நடத்தப்பட்ட விதத்தால் கட்சியினர் மனமுடைந்தனர்.
100 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின் அடிப்படையிலேயே தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினோம். அரசியலில் சூழலுக்கு ஏற்ப நிலைப்பாடு மாறக்கூடும்.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எல்லா காலங்களிலும் கொலைகள், வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க., ஆட்சியிலும் 2 நாட்களுக்கு ஒரு முறை கொலை நடந்து கொண்டுதான் இருந்தது. திடீரென நடக்கும் கொலையை போலீசார் சென்று தடுத்துவிட முடியாது. துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்து, ஜாமினில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
