உலக தற்கொலை தடுப்பு தினம்
சிவகங்கை:உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனநல துறை சார்பாக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முதல்வர் கலைவாணி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி வளாகத்தில் இருந்த மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவமனை கண்காணிப்பாளர் தமிழ்வாணன், நிலைய மருத்துவர் முகமது ரபி,உதவி நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ், மனநலத்துறை தலைவர் ராஜசுந்தரி,டாக்டர்கள் வெங்கடேசன், அனிதாபாய், சிவசுந்தரி, வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.




