பாரம்பரிய மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கு... அரசு கைகொடுக்குமா?நலவாரியம் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
உடுமலை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூங்கில் கூடை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உடுமலையில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பாரம்பரியமாக மூங்கில் கொண்டு, கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்தகைய தொழில் சார்ந்து நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
நாகரீக வளர்ச்சி காரணமாக, இது போன்ற பெரும்பாலான கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் சார்ந்த பகுதிகளில் இன்றளவும் இது போன்ற கைத்தொழில்கள் முற்றிலுமாக காணாமல் போகவில்லை.
நேர்த்தியான தயாரிப்பு உடுமலை நகரம் பாபுகான் வீதியில், பச்சை மூங்கிலை விலைக்கு வாங்கி, அழகிய நேர்த்தியான பல்வேறு வடிவிலான கூடை தயாரிக்கின்றனர்.



