ஆட்டுக்கல், அம்மி தயாரிப்பில் மாதம் ரூ.15 லட்சம் வர்த்தகம்! :சுற்றுலா செல்லும் இடத்தை யாராலும் கணிக்கவே முடியாது!
'கிரானைட்' கற்களில் ஆட்டுக்கல், அம்மி தயாரித்து, 'ஸ்டோன் அண்டு சோல்' என்ற நிறுவனம் வாயிலாக விற்பனை செய்யும், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த, 29 வயதாகும் சவுந்தர்ய லட்சுமி:
என் அப்பா, பல ஆண்டுகளாக, 'கிரானைட்' எனப்படும், 'பாலீஷ்' செய்யப்பட்ட கருங்கல் தொழில் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கில் நஷ்டம் அதிகமாகி, வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு திருமணமாகி, அமெரிக்கா சென்று விட்டேன்.
அங்கு வாழும் இந்தியர்களிடம், நம் ஊர் அம்மி, ஆட்டுக்கல் என பாரம்பரிய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆனால், அதை இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி கிரானைட், மார்பிள் என, அழகான வடிவமைப்புகளில் செய்து பயன்படுத்தி வந்தனர்.
