“வியாதி மக்களுக்கு.. லாபம் பாஜகவுக்கு..” - மனோ தங்கராஜ் சாடல்
சென்னை,திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் Pharma
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் Pharma நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளன. அதே நேரம் இந்தியா வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் உடைய நாடாக மாறி வருகிறது. இதே மருந்து நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்க மத்திய பாஜக அரசு Production Linked Incentive (PLI) Scheme மூலமாக ரூ.6,000 கோடி மானியம் வழங்கியுள்ளது.
மறுபுறம், அதே நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை சிபாரிசு செய்யும் மருத்துவர்களை கவர விலையுயர்ந்த அன்பளிப்புகள், வெளிநாட்டு சுற்றுலா, ஸ்டார் ஹோட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், வரிச்சலுகைகள், இலவச மருந்துகள் என அள்ளி வீசுகின்றன. 2024-25 ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்து விற்பனையின் சந்தை மதிப்பு ரூ.15,000 கோடி. இதில் Sun Pharma, USV, Torrent, & Lupin போன்ற நிறுவனங்கள் 2025-26 நிதியாண்டில் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.


