சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்து 7 ஆண்டுகள் கடந்த பிறகும், நகர பகுதியின் முக்கிய சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


