’இன்றே கடைசி நாள்..’ திடீரென வந்த இமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த ஆரக்கிள் ஊழியர்கள்!
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 14 அன்று இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, இணைய வர்த்தக உலகில் முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் AI உந்துதல் தீர்வுகளை நோக்கி நகர்வதிலும் ஒவ்வொரு நிறுவனங்களும் கவனம் செலுத்துகின்றன. செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்திறனில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனங்கள் விளக்கமளிக்கின்றன.
இந்த நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது செலவுகளைக் குறைக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்குப் பணிநீக்க மின்னஞ்சல்களை (Layoff Emails) அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு முன்அறிவிப்பின்றி, பணிநீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலமாக நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன.
