லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக கங்கை ஆரத்தி கோலாகலம்
லண்டன்: லண்டன் தேம்ஸ் நதிக்கரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதன்முறையாக 'கங்கை ஆரத்தி' திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் திரண்டனர்.
சின்மயா மிஷன் அமைப்பின் 75வது ஆண்டு உலகளாவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த திருவிழா நடந்தது.
இதையொட்டி, லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் 'டோட்டலி தேம்ஸ்' திருவிழாவுடன் இணைந்து 'தேம்ஸ் நதியில் கங்கை ஆரத்தி' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

