22 ஆண்டுகளுக்கு பின் 10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த வாய் பேசாத, காது கேளாத தாய்
ஸ்ரீநகர், விடாமுயற்சி இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். வாய் ப
விடாமுயற்சி இருந்தால் வயதும் உடல் குறைபாடும் ஒரு தடையல்ல என்பதை ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத 45 வயது பெண்மணி ஒருவர், தன் மகனின் உதவியுடன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ரேணு ஹன்ஸ் (வயது 45). காஷ்மீர் பகுதியை சேர்ந்த இவர், வாய் பேசும் திறனும் காது கேட்கும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். ரேணு ஹன்ஸ் திருமணத்திற்கு முன்பே 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன் பிறகு திருமணம், குடும்பம் எனச் சூழ்ந்து கொண்டதால், கடந்த 22 ஆண்டுகளாக அவரது கல்வி பாதியிலேயே நின்றது. இருப்பினும், எப்படியாவது பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்ற லட்சியம் அவரது மனதில் உறுதியாக இருந்தது.

