போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க., பிரமுகர் நாகையில் என்.சி.பி., அதிகாரிகள் விசாரணை
சென்னை: தி.மு.க., பிரமுகரான, 'புல்லட்' மகாலிங்கம், 64, என்பவர், மும்பை, டில்லியில் இருந்து, தமிழகத்திற்கு, 'மெத் ஆம்பெட்டமைன்' கடத்துவதாக தகவல் கிடைத்ததால், நாகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே, விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் மகாலிங்கம், அவரது மகன் அலெக்ஸ், 41 ஆகியோர், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு தஞ்சாவூரில் இருந்து, புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் கடத்திய அலெக்ஸ், என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.







