குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் உளவுப்பிரிவு போலீஸ்!
இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''மாவட்டச் செயலர் பதவிக்கு முட்டி மோதுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க., தகவலா ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''ஆமா... நாம் தமிழர் கட்சியில் இருந்து, தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் பிரதமர் பெயர் கொண்டவருக்கு, மாநில அளவுல பொறுப்பு குடுத்து கவுரவிச்சாங்க... அப்புறமா, அவர் பல சர்ச்சைகள்ல சிக்கியதால, பதவியை பறிச்சு ஓரங்கட்டிட்டாங்க...



