தக்க நேரத்தில் 9 பிஞ்சு உயிர்களை காப்பாற்றிய செவிலியர்கள்; குவிகிறது பாராட்டு
மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து புதிதாக பிறந்த 9 பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலிர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி பகுதியில் உள்ள ஆசியன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட செவிலியர்கள், சிறிதும் பதற்றம் அடையாமல், 9 பச்சிளம் குழந்தைகளை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றினர்.
மேலும், ஐசியூ உள்பட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 58 நோயாளிகளையும் உஷார்படுத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.


