மகாராஷ்டிர மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து: 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 58 பேர் அதிரடி மீட்பு!

காவல் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்
மகாராஷ்டிராவில் உள்ள ஆசியன் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பச்சிளம் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சத்ரபதி சம்பா நகரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்தின் காரணமாக மருத்துவமனை முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் பரவியது. இதனால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்து வெளியேறினர். தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் வாசிக்க: நாம் இத்தனை காலம் படித்த உலக வரைபடம் தவறானதா..? ஐ.நா.வில் இன்று பரபரப்பு வாக்கெடுப்பு! | Mercator projection
காவல் துறையினரும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து துரிதமாகச் செயல்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 58 நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். குறிப்பாக, என்.ஐ.சி.யு பிரிவில் இருந்த 9 பச்சிளம் குழந்தைகள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
