கூடலூர் அருகே சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை... வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் - நாடுகாணி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் - நாடுகாணி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் இரவு நேர பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் 60% வனப்பகுதிகளைக் கொண்ட ஒரு மலை மாவட்டமாகும். இங்கு புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, செந்நாய் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. குறிப்பாக காட்டு யானைகள் முதுமலை வனப்பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்டமாகவும் தனித்தனியாகவும் அடர்ந்த வனப்பகுதிகளிலும் சாலையோரங்களிலும் நடமாடுகின்றன.


