பனிச்சரிவு அபாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு! நேபாள துயரத்தை அடுத்து முன்னெச்சரிக்கை
- சிறப்பு நிருபர் -நேபாள பெருவெள்ள ஆபத்தை தொடர்ந்து, இமயமலையை ஒட்டிய மாநிலங்களில், பனிப்பாறை ஏரி
நேபாள பெருவெள்ள ஆபத்தை தொடர்ந்து, இமயமலையை ஒட்டிய மாநிலங்களில், பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்படும் வெள்ளம் மற்றும் பனிச்சரிவு அபாயங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். மாயமான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளும் துரிதகதியில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பனிச்சரிவு அபாயங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசின் உள்துறை செயலர் கோவிந்த் மோகன் நேற்று ஆய்வு நடத்தினார்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
