ரோட்டோர புதர் செடிகளை வேரோடு அகற்ற நடவடிக்கை தேவை: மலைப்பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்க
மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொடைக்கானல் சுற்றுலாத் தலமாகவும், பழநி ஆன்மிகத் தலமாகவும் உள்ளது.
தாண்டிக் குடி, கொடைக்கானல், நத்தம், பழநி உள்ளிட்டவை மலை சார்ந்த இடமாக உள்ளன.
இச்சூழலில் ரோட்டோரம் வளரும் புதர் செடிகளை முறையாக அகற்றாததால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலைப்பகுதியில் அதிக மழைப் பொழிவால் செடி, கொடிகள் விரைவில் அடர்ந்து வளர்கின்றன. இதனால் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ரோட்டை கடந்து செல்லும் வாகனங்களில் செடிகளால் கீறல், கண்ணாடி சேதம டைகின்றன.


