ரேவந்த் ரெட்டி Vs கொண்டா குடும்பம்... தெலங்கானாவில் வலுக்கும் அரசியல் மோதல்!
வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸின் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்று, கொண்டா குடும்பம்.
“மரண தண்டனைக் கைதியிடம்கூட கடைசி நேரத்தில் விருப்பத்தைக் கேட்பார்கள்; ஆனால், எனக்கு அந்த வாய்ப்புக்கூட வழங்கவில்லை!” என்று கொந்தளிக்கிறார், தெலங்கானா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கொண்டா சுரேகா.
முதல்வர் ரேவந்த் ரெட்டியை, சுரேகாவின் மகள் சுஷ்மிதா கடுமையாக விமர்சித்துப் பேசியதுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம். ஆனால், ‘இது வெறும் மகள் பேசிய விவகாரமா... அல்லது தெலங்கானா காங்கிரஸுக்குள் நீண்ட நாள்களாகப் புகைந்துகொண்டிருந்த மோதல் வெடித்துக் கிளம்பியிருக்கிறதா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

