அழகிய நதி சுற்றுலா! பொள்ளாச்சியில் அறிமுகப்படுத்த திட்டம் :கல்லுாரிகளில் தனி குழு அமைக்க முடிவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நதிகளை அழகுப்படுத்தி, 'அழகிய நதி சுற்றுலா' என்ற தலைப்பில் மேம்படுத்தவும், கல்லுாரியில் இளைஞர் சுற்றுலா குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அரசின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கழக சிறப்பு நிலைக்குழு தலைவர் சேவக் விஜய் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ரோட்டோரம் நிழல் அளிக்கும் மரங்கள், பாய்ந்தோடும் ஆழியாறு ஆறு, பச்சை பசேலென நெல் வயல்கள் என சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஏராளமான 'ஸ்பாட்'கள் உள்ளன.
இதுதவிர, வால்பாறையில், சின்னக்கல்லார், சோலையாறு டேம், அப்பர் நீராறு, லோயர் நீராறு என நீர்தேக்கங்கள்; பசுமையான தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன.

