புது முயற்சிகளுக்கு சகுனம் சொல்லும் பனைமரங்கள்... விராலூர் வடமலையான் கோயில் அதிசயங்கள்!
வடமலையானே வாக்கு கொடுத்த இடம் என்பதால், இந்த இரண்டு பனை மரங்களுக்கு அருகில் நின்று பக்தர்கள் தங்கள் முக்கிய முயற்சிகளுக்கு சகுனம் பார்க்கிறார்கள்.|புது முயற்சிகளுக்கு சகுனம் சொல்லும் பனைமரங்கள்|Panai Marangal that herald omens for new ventures... The wonders of the Vadamalayan Temple in Viralur!
இந்த வடமலையானை வணங்கினால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளையே வணங்குவதற்குச் சமம். வடமலையானே வாக்கு கொடுத்த இடம் என்பதால், இந்த இரண்டு பனை மரங்களுக்கு அருகில் நின்று பக்தர்கள் தங்கள் முக்கிய முயற்சிகளுக்கு சகுனம் பார்க்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வசித்த சில அந்தணர்கள் ராமேஸ்வரம் சென்று புனித நீராடுவது என்று முடிவு செய்து புறப்பட்டனர். மொத்தம் 26 பேர் இருந்தனர். ஆனால் சிறிது தூரம் சென்றதும்தான் தங்களோடு புதியதாக ஒருவர் சேர்ந்து வருவதை உணர்ந்தனர்.
வந்தவர் திருமண் இட்டிருந்தார். அதனால் அவர் வைணவர் என்பது புரிந்தது. பெருமாளின் பக்தரான அவரை யார் என்று கேட்கவில்லை. தங்களின் குழுவில் ஒருவர் என்றே பாவித்தனர். நடைப்பயணம் தொடர்ந்தது. பயணத்தின்போது ஒருநாள் இரவு விராலூர் என்கிற தலத்துக்கு வந்து ஓய்வெடுத்தனர். அதிகாலை கண்விழித்துப் பார்த்தபோது, திருமண் இட்டிருந்த அன்பரைக் காணவில்லை. அதிர்ந்துபோயினர் அந்தணர்கள்.



