ஊட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு கொட்டிய மழை... விவசாயிகள் மகிழ்ச்சி..!
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, போதிய மழை இல்லாததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு, மலைக் காய்கறிப் பயிர்கள் வாடி வதங்கின.

