நில தகராறில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: நில தகராறு காரணமாக, நபரை சுட்டு கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், குட்டந்தி கிராமத்தில் வசித்த சாபு நாணய்யா, 35, செரன்டா மோகன், 38, இடையே நில தகராறு இருந்தது.
கடந்த, 2015ம் தேதி, சாபு நாணய்யா தன் வீட்டருகில் நடந்து செல்லும் போது, துப்பாக்கியுடன் மரத்தின் பின்னே மறைந்திருந்த செரன்டா மோகன், சாபு நாணய்யாவை குறி வைத்து, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.


