நுகா்வோா் நீதிமன்றம் மாற்றம்: வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
வேலூரில் செயல்பட்டு வரும் நுகா்வோா் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
வேலூரில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தை நிா்வாகக் காரணங்களுக்காக கிருஷ்ணகிரிக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் கடந்த செப். 7-ஆம் தேதி முதல் தொடா் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை (செப்.10) வரை நடைபெற உள்ள இந்தத் தொடா் புறக்கணிப்பால், வழக்கு விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.



