Crime, law and justice
வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டை திருவண்ணாமலைக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் கோர்ட்டில் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த கோர்ட்டை திருவண்ணாமலைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.