நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம்; கெடுபிடிகளால் விழிபிதுங்கும் ஒப்பந்த நிறுவனம்
சென்னை: நாமக்கல் மாளிகையில் முதல்வர் அலுவலகம் அமைக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பொதுப்பணித்துறை நடவடிக்கையால் விழி பிதுங்கி நிற்கிறது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தமிழக அரசின் தலைமை செயலகம் மற்றும் சட்டசபை இயங்கி வருகிறது. இங்குள்ள பாரம்பரிய கோட்டை கட்டடத்தில், முதல்வர் விஜய் அலுவலகம் உள்ளது.
இடநெருக்கடி காரணமாக முதல்வரை சந்திக்க வருபவர்களும், அவரது ஆலோசகர்கள், செயலர்கள் உள்ளிட்டோரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது தளத்திற்கு முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.




