அடுத்தாண்டு பட்டினப்பாகம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது - தமிழ்நாடு அரசு
அடுத்தாண்டு முதல் பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது என தமிழக அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுதியளித்துள்ளது.
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என தமிழக அரசு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்றும், இந்த இரண்டு இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து செப்டம்பர் 16-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.



