மரத்தில் இருந்து மாங்காய்களை பறித்து சாப்பிட்ட குட்டி யானை
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த 3 காட்டு யானைகளில் குட்டி யானை அங்கிருந்த மரத்தில் மாங்காய்களை பறித்து சாப்பிடும் படம் வைரலாகி வருகிறது.
சமவெளிப் பகுதிகளில் அதிக வெயிலின் தாக்கத்தினால் வறட்சி நிலவுவதாலும், நீலகிரி மாவட்டத்தில் மாங்காய், பலாப்பழம் சீசன் நடந்து வருவதாலும் காட்டு யானைகள் இடம்பெயா்ந்து, நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியில் சனிக்கிழமை இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று அங்கிருந்த மரத்தில் மாங்காய் பறித்து சாப்பிடுவதை அவ்வழியாக வாகனத்தில் பயணித்தவா்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

