பழுதான கரும்பு லாரியை சுற்றி வளைத்த யானைகள்
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் வனப்பகுதி வழியாக, சர்க்கரை ஆலைக்கு

புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் வனப்பகுதி வழியாக,
சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற ஒரு லாரி பழுதானது.
லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் சென்று விட்டார். இரவில் வனப்பகுதி
சாலையில் நின்றிருந்த லாரியை, யானைகள் சுற்றி வளைத்தன. இரவு முழுக்க,
வயிறு முட்ட கரும்பை சுவைத்து மகிழ்ந்தன. இதனால் அவ்வழியே
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாகனத்தில் காத்து நின்றவர்கள்,
யானைகள் கரும்பை சுவைத்து மகிழும் காட்சியை, மொபைல்போனில் வீடியோ
எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.