கால்நடை டாக்டர்களுக்கு ரேடியோகிராபி பயிற்சி
கோவை: கால்நடை மருத்துவர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டல் ரேடியோகிராபி பயிற்சி, அரசு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோ தலைமையில் நடந்த பயிற்சியில், மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ரே கருவி மற்றும் டிஜிட்டல் ரேடியோகிராபி தொழில்நுட்பத்தின் செயல்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை, ஊட்டி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் எக்ஸ்ரே தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 30 பேர் பங்கேற்றனர்.

