இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்; இபிஎஸ் நம்பிக்கை
சென்னை: 'இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க., அடையும்' என அக்கட்சியின் பொதுச்செயலர் இபிஎஸ் பேசி உள்ளார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இபிஎஸ் தலைமையில், இன்று நடந்தது. துணை பொதுச்செயலர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் இருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை
இபிஎஸ் பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:பொய்களை 'ரீல்ஸ்' வழியே வாரி இறைத்து, தேர்தலில் த.வெ.க., வென்று விட்டது. இந்த ஆட்சி நீடிக்காது. நுாறு நாட்களிலேயே, த.வெ.க., ஆட்சியின் சாயம் வெளுத்து விட்டது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆறு தொகுதிகளும், அ.தி.மு.க., வெற்றி பெற்றவை.



