நாவலுாரில் 20 மாடி குடியிருப்பு டி.ஆர்.ஏ., ஹோம்ஸ் கட்டுகிறது
சென்னை: சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., நாவலுாரில், 20 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, 'டி.ஆர்.ஏ., ஹோம்ஸ்' நிறுவனம் செயல்படுத்துகிறது.
சென்னை மற்றும் புறநகரில், அடுக்குமாடி திட்டங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அதிக தளங்களை உடைய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், சிறப்பு வசதிகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதில், போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஓ.எம்.ஆரில் அதிக தளங்களுடன் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை வாங்குவோர், அங்கிருந்து வங்கக்கடலை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

