நாவலுாரில் 20 மாடி குடியிருப்பு டி.ஆர்.ஏ., ஹோம்ஸ் கட்டுகிறது
சென்னை: சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., நாவலுாரில், 20 மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, 'டி.ஆர்.ஏ., ஹோம்ஸ்' நிறுவனம் செயல்படுத்துகிறது.
சென்னை மற்றும் புறநகரில், அடுக்குமாடி திட்டங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அதிக தளங்களை உடைய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதில், சிறப்பு வசதிகளுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதில், போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஓ.எம்.ஆரில் அதிக தளங்களுடன் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை வாங்குவோர், அங்கிருந்து வங்கக்கடலை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
இதனால், பழைய மாமல்லபுரம் சாலையின் கிழக்கு பக்கம் கட்டப்படும் அடுக்குமாடி திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது. இதில், டி.ஆர்.ஏ., ஹோம்ஸ் நிறுவனம் சார்பில், நாவலுார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நாவலுாரில், 'ஐஹார்ட்' என்ற பெயரில் இந்நிறுவனம், 20 மாடிகள் உடைய அடுக்குமாடி திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
அதிகபட்ச சிறப்பு வசதிகளுடன், 15.5 லட்சம் சதுரடியில் இங்கு வீடுகள் கட்டப்பட உள்ளன. சிறுசேரி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மிக நெருக்கமாக இத்திட்டம் அமைந்துள்ளது என, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.