‘ஜனநாயகத்தில் அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல’ - மாணிக்கம் தாகூர்
சென்னை,காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-“அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் த
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் தி.மு.க.வின் எம்.பி. ஆ.ராசாவின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது.
மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களை குறிவைத்து தாக்குவதை தி.மு.க. வழக்கமாகக் கொண்டுள்ளது. உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.








