வேலூர்: தேவாலய கட்டுமான மேல்தளம் இடிந்து விபத்து; 4 பேர் மீட்பு, 2 பேரை மீட்கும் பணி தீவிரம்
வேலூர்வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு
வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

