Crime, law and justice
வேலூரில் புதிய சர்ச் கட்டுமானம் இடிந்ததில் 3 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் சர்ச்சின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவலம் அடுத்த மந்தி கிருஷ்ணாபுரத்தில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ஜான்,39, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இமானுவேல்,45, சாமுவேல்,45, ஆகியோர் மருத்துவனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3ஆக பதிவானது.
கட்டட இடிபாடிகளில் சிக்கிய எஞ்சியவர்கள் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.