'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ்
மன்மோகன் சிங் முன்வைத்த BRICS மேம்பாட்டு வங்கி யோசனை முதல் NDB வரை, BRICS அமைப்பின் 20 ஆண்டு பயணத்தை அறியுங்கள்|As India hosts the 2026 BRICS summit, Jayaram Ramesh recalls how the bloc evolved from a 2001 Goldman Sachs idea into a global grouping.
கோல்ட்மேன் சாக்ஸ் நிபுணர் ஜிம் ஓ’நீலின் BRIC கருத்து முதல் இன்றைய BRICS வரை அமைப்பு வளர்ந்த வரலாறு மற்றும் இந்தியாவின் பங்கு.
வருகிற செப்டம்பர் 12, 13 தேதிகளில், BRICS மாநாடு புதுடெல்லியில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.






