“நியாயம் கேட்டு போராட சட்ட நகலை எரிக்கலாமா?” - காவலருக்கு எதிராகச் சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு
தனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லையெனில், அடுத்தகட்டமாக தேசியக்கொடியையும் எரிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறார்
அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் என் மகள் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டாள். இதற்குக் காரணமான மருத்துவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி காவலர் கோதண்டபாணி, கொடி எரிப்பு, சட்ட நகல் எரிப்பு எனத் தொடர் போராட்டங்களை நடத்திவருவது சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சி.ஆர்.பி.எஃப் பகுதியில் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எனக் குடும்பத்துடன் வசித்துவரும் கோதண்டபாணி, ‘டி 7 ஆவடி டேங்க் ஃபாக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.


