பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது! தீர்ப்பாயம்
பட்டினம்பாக்கம், நீலாங்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பக்தர்கள். - கோப்புப் படம்
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சிலைகளை அனுமதிக்கப்பட்ட மற்ற இடங்களுக்கு அனுப்புவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.



