திருவள்ளூர் நகராட்சி விரிவாக்க திட்டம் 2 ஆண்டாக கிடப்பில்!அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஒன்பது ஊராட்சிகள் புத்துயிர் அளிக்குமா த.வெ.க., தலைமையிலான அரசு?
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி விரிவாக்க திட்டத்திற்காக, நகராட்சியின் புதிய எல்லை வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதற்கான கருத்துரு கடந்த ஆட்சிக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்ட ஒன்பது ஊராட்சிகளும், அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றன. தற்போது, த.வெ.க., தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவள்ளூர் நகரம், கடந்த 1948ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின், திருவள்ளூரை தலைமையிடமாக கொண்டு, 1997ல் தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தேர்வு நிலை நகராட்சியான திருவள்ளூர், 10.65 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம், 27 வார்டுகள் கொண்ட இந்நகராட்சியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 55 ஆயிரத்து 722 பேர் வசித்து வருகின்றனர்.

