நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க உறவினர்களுக்கு மரபணு சோதனை தமிழக அரசு ஏற்பாடு
சென்னை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, உறவினர்களுக்கு தடய அறிவியல் ஆய்வகங்கள் வாயிலாக, மரபணு பரிசோதனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்த 305 பேரில், 220 பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள, 85 நபர்களைத் தொடர்புகொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.








