தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கஜகஸ்தான் நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு, அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தியா - கஜகஸ்தான் இடையே வர்த்தக கருத்தரங்கம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கஜகஸ்தானின் வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்பு துறை துணை அமைச்சர் ஐதர் அபில்டபெகோவ் தலைமையிலான குழுவினருடன், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேச்சு நடத்தியுள்ளார்.


