தில்லியில் 4 மாடிக் கட்டடம் திடீரென சாய்ந்தது: உடனடியாக இடிக்க அதிகாரிகள் உத்தரவு!
தில்லியில் 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அந்தக் கட்டடத்தை அதன் உரிமையாளரே முன்வந்து இடித்து அகற்ற தில்லி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


