முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி செப்.15ல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம்: த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாகபயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செப்.15 முதல்விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் பாக்கியநாதன் கூறிய தாவது:
பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள்இருமுறை விவசாய சங்க நிர்வாகிகளைஅழைத்து பேசினர். பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.முதல்வர் விஜய் உடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.




