பேராவூரணி அருகே 2 கயிறு தொழிற்சாலைகளில் தீ விபத்து பொருள்கள் எரிந்து சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 2 கயிறு தொழிற்சாலைகளில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் மதிப்பிலான கயிறு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை பிற்பகலில் நேரிட்ட தீவிபத்தில் பற்றியெரிந்த கயிறு தொழிற்சாலை.
பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் செங்கமங்கலம் கிராமத்தில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ராஜகுமாா், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள புதுப்பட்டினத்தைச் சோ்ந்த அப்துல் ஜப்பாா் ஆகிய இருவரும் அருகருகே கயிறு பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனா். இதேபோல், இந்தப் பகுதியில் கயிறு பொருள்கள் தயாரிக்கும் வேறு பலரின் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.




