Politics
கயிறு ஆலைகளில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருட்கள் சேதம்

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே, இரு கயிறு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கமங்கலத்தில், ராஜகுமார், அப்துல் ஜப்பார் ஆகியோரின் கயிறு தொழிற்சாலைகள் அருகருகே உள்ளன. நேற்று மதியம், ராஜகுமார் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ, பக்கத்தில் உள்ள அப்துல் ஜப்பாரின் தொழிற்சாலைக்கும் பரவியது.
தகவலறிந்து வந்த தீ யணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்தனர். இரு தொழிற்சாலைகளிலும், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.