உயிர்ச்சத்து நிறைந்த ‘காவேரித் தங்கம்’, 100% அதிக மகசூல் தரும் ‘காவேரி நாடன்’!
``வெள்ளம், வறட்சி ஆகிய இரண்டு விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது, எல் நினோ. சமீபகாலமாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையாக இருந்து வருகிறது
புதிய வாழை ரகங்கள்!
திருச்சி மாவட்டம், போதாவுரில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் `காவேரித் தங்கம்', `காவேரி நாடன்' ஆகிய இரண்டு புதிய வாழை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. `சூப்பர் எல் நினோவால் விவசாயத்தில் ஏற்படும் சவால்கள் - மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடத்தப்பட்டன.




