உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கரி கடைகளில் சோதனை
ப.வேலுார்:ப.வேலுார் பகுதியில் உள்ள, பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ப.வேலுாரில் உள்ள பேக்கரி கடைகளில், தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, ப.வேலுார் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து சாமி மற்றும் குழுவினர், நேற்று பழைய பைபாஸ் சாலையில் உள்ள பேக்கரி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேக்கரி கடைகளில் உணவு கையாளுபவர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகளை அணியவில்லை. சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை. தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியுடன் கூடிய லேபிள்களை, காட்சிப்படுத்துமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

