Lifestyle and human interest
பேராவூரணி கடைகளில் ஆய்வு ரூ. 30 ஆயிரம் அபராதம்

பேராவூரணி கடைவீதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்து, விதிமீறிய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
அபராதம்!
தஞ்சாவூா் ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ரஹிமுனிஷா, வேல்முருகன், சுப்பிரமணி ஆகியோா் அடங்கிய குழுவினா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
பேராவூரணி நகரில் செயல்படும் டீக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல்கள் உள்பட 8 கடைகளில் நடத்திய ஆய்வில் விற்பனைக்கு இருந்த கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இன்றி இயங்கி வந்த பழக்கடைக்கு ரூ.10 ஆயிரம், சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், உணவுப் பொருள்களை பேக்கிங் செய்ய அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா். மேலும் பொதுமக்கள் உணவுப் பொருள்கள் குறித்த புகாா்களை 94440-42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.