கோத்தகிரி ஈளாடா தடுப்பணையில் வரத்து குறைவு நகர பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
கோத்தகிரி: கோத்தகிரி ஈளாடா தடுப்பணையில், தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், நகர பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி நகர பகுதிக்கு, ஈளாடா தடுப்பணியில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை, 90 மீ., நீளம், 60 மீ., அகலம், 12 அடி ஆழம் கொள்ளளவு கொண்டது.
இங்கிருந்து, கொண்டுவரப்படும் தண்ணீர், புதுார் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில், சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து 'பம்ப்' செய்யப்பட்டு, சக்தி நிலை மெகா தொட்டியில் சேகரித்து நகரின் தாழ்வான பிற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

